திருவண்ணாமலை; சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது
திருவண்ணாமலையில் சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்தபோது, அப்பள்ளியில் திருவண்ணாமலை தாலுகா பண்டிதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 31) என்பவர் ஒரு ஆண்டு ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி உள்ளார்.
அவர், அந்த மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அவர், கடந்த டிசம்பர் மாதம் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதனால் மாணவி தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். எனினும், வெங்கடேசன் ெதாடர்ந்து மாணவியை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து இளம்பெண் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, வெங்கடேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Related Tags :
Next Story