தேனி மாவட்ட கோர்ட்டில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆய்வு


தேனி மாவட்ட கோர்ட்டில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆய்வு
x
தினத்தந்தி 26 Jun 2021 8:31 PM IST (Updated: 26 Jun 2021 8:31 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட கோர்ட்டில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆய்வு செய்தார்.

தேனி:
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி தேனி மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் ஆய்வு செய்ய தேனிக்கு வந்தார். அதன்படி தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள கோர்ட்டுகளில் அவர் நேற்று நிலுவையில் உள்ள வழக்கு விவரங்கள், கோர்ட்டு பணிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார்.  
பின்னர் கோர்ட்டு வளாகத்தில், வக்கீல் சங்கங்களின் நிர்வாகிகளுடன் அவர் கலந்துரையாடினார். முன்னதாக கோர்ட்டு வளாகத்தில் தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி மரக்கன்று நட்டார். அப்போது மாவட்ட செசன்சு கோர்ட்டு நீதிபதி விஜயா மற்றும் நீதிபதிகள், வக்கீல் சங்கங்களின் நிர்வாகிகள், கோர்ட்டு ஊழியர்கள் உடன் இருந்தனர். பின்னர் தலைமை நீதிபதி, பெரியகுளம் கோர்ட்டில் ஆய்வு செய்தார்.


Next Story