தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிறுவன் உள்பட 3 பேர் பலி
தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிறுவன் உள்பட 3 பேர் பலியானார்கள்.
தேனி:
தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 116 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 133 பேர் நேற்று குணமாகினர். தற்போது 633 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதற்கிடையே கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வருசநாடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், ஆண்டிப்பட்டியை சேர்ந்த 70 வயது முதியவர், பெரியகுளம் பகுதியை சேர்ந்த 33 வயது ஆண் ஆகிய 3 பேர் நேற்று சிகிச்சை உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 486 ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story