10 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது


10 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 Jun 2021 9:32 PM IST (Updated: 26 Jun 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

10 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்படடனர்.

பரமக்குடி, 
பரமக்குடி எமனேசுவரம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் ஹேமலதா என்ற பெண்ணுடன் நேற்று முன்தினம் காலை அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாணிக்கம் தலைமையில் போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இந்தநிலையில் அங்கிருந்த ரஞ்சித்குமார் திடீரென தப்பி ஓடி விட்டார். பின்னர் போலீசார் ஹேமலதாவை பிடித்து அவரது வீட்டிற்கு அழைத்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து ஹேமலதா அவரது தந்தை கருப்பையா (வயது64) அஜித் குமாரின் தந்தை எபினேசர் (65) ஆகிய 3 பேரையும் கைது செய்து காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

Next Story