குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டுயானைகள்


குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டுயானைகள்
x
தினத்தந்தி 26 Jun 2021 9:43 PM IST (Updated: 26 Jun 2021 9:43 PM IST)
t-max-icont-min-icon

குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டுயானைகள்

பந்தலூர்

பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே உள்ள சப்பந்தோடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது தோட்டங்களில் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் அந்த பகுதிக்குள் காட்டுயானைகள் புகுந்தன. தொடர்ந்து வெளியே நடமாடிய பொதுமக்களை துரத்தின. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்களது வீடுகளுக்கு ஓட்டம் பிடித்து பதுங்கி கொண்டனர். 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு காட்டுயானைகள் புஞ்சைக்கொல்லி பகுதிக்குள் புகுந்து பொதுமக்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டன. இதனால் அவசர தேவைக்கு கூட வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். பின்னர் நேற்று காலை 6 மணியளவில் சேரம்பாடி சாலையில் காட்டுயானைகள் உலா வந்தன. 

இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் ஆனந்தகுமார், வனவர் சுரேஷ்குமார் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். மேலும் காட்டுயானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


Next Story