தார்சாலை அமைக்க கோரிக்கை


தார்சாலை அமைக்க கோரிக்கை
x

தார்சாலை அமைக்க கோரிக்கை

பந்தலூர்

பந்தலூர் அருகே கிளன்ராக் ஆதிவாசி காலனி உள்ளது. இங்கு ஏராளமான ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பந்தலூருக்கு வந்து செல்ல வேண்டி உள்ளது. ஆனால் அந்த வழியில் உள்ள சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் மண்சாலையாக உள்ளது. மழைக்காலத்தில் அந்த சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. 

இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அவசர தேவைக்கு கூட வாகனங்களை விரைவாக இயக்க முடியாத நிலை உள்ளது. நேற்று முன்தினம் வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஜீப்பில் கிளன்ராக் பகுதிக்கு ஆய்வுக்காக சென்றனர். பின்னர் அங்கிருந்து திரும்பி வரும்போது, சேற்றில் ஜீப் சிக்கி கொண்டது. நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு ஜீப் மீட்கப்பட்டது. 

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள மண்சாலையால் கர்ப்பிணிகள், நோயாளிகளை விரைவாக ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து செல்ல முடியவில்லை. இதனால் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. எனவே அந்த சாலையை தார்சாலையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story