671 பேருக்கு கொரோனா 9 பேர் பலி
671 பேருக்கு கொரோனா 9 பேர் பலி
கோவை
கோவையில் கொரோனா 2-வது அலையில் தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்தது. கடந்த 2 மாதங்களாக தீவிரமாக இருந்த நோய் தொற்று சுகாதாரத் துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற் கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கையால் தற்போது குறைந்துள்ளது. அதேபோல் உயிரிழப்பும் கணிசமாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் கோவையில் கொரோனா தொற்றுக்கு பலியானவர் களின் எண்ணிக்கை 2,003 ஆக உயர்ந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக 671 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 179 உயர்ந்துள்ளது.
இதுதவிர அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 1,263 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.
கோவையில் இதுவரை 2 லட்சத்து 9 ஆயிரத்து 54 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது 6 ஆயிரத்து 122 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 128 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்து 986 ஆக உயர்ந்து உள்ளது. 168 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன் மூலம் மொத்தம் 27 ஆயிரத்து 89 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று தொற்று பாதித்து சிகிச்சை பெற்று 3 பேர் உயிரிழந்தனர்.
இதுவரை 158 பேர் இறந்தனர். தற்போது 739 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் உள்ள 340 ஆக்சிஜன் படுக்கைகளில் 158 படுக்கைகள் நிரம்பியது. 182 படுக்கைகள் காலியாக இருக்கிறது.
Related Tags :
Next Story