மீன்பிடிக்க மீனவர்கள் எல்லை தாண்ட வேண்டாம்


மீன்பிடிக்க மீனவர்கள் எல்லை தாண்ட வேண்டாம்
x
தினத்தந்தி 26 Jun 2021 10:05 PM IST (Updated: 26 Jun 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

மீன்பிடிக்க மீனவர்கள் எல்லை தாண்ட வேண்டாம் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ராமேசுவரம், 
 பாம்பன் துறைமுக பகுதியில் ராமேசுவரம் மீன்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன் தலைமையில் விசைப்படகு மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டிச்செல்வதை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் மீன்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன் பேசியதாவது:- மீன் பிடிக்கச்செல்லும் மீனவர்கள் கண்டிப் பாக இந்திய கடல் எல்லை தாண்டி யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். 
இந்திய கடல் எல்லையை தாண்டி செல்வதால் தான் இலங்கை கடற்படை தாக்குதல், விரட்டியடிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதுபோன்ற சம்பவங்களை முழுமையாக தடுக்கவே இந்திய கடல் எல்லையை தாண்டி செல்ல வேண்டாம் என தொடர்ந்து அறிவித்து வருகிறோம். எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்லும் படகுகள் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில்  அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் கடலோர தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சந்தன மாரி மற்றும் கடலோர போலீசாரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Next Story