பல்லடம் உட்கோட்ட காவல்துறையின் சார்பில் பொதுமக்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு

பல்லடம் உட்கோட்ட காவல்துறையின் சார்பில்  பொதுமக்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 27 Jun 2021 12:40 AM IST (Updated: 27 Jun 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் உட்கோட்ட காவல்துறையின் சார்பில் பொதுமக்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமாக ஜூன் மாதம் 26-ந்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையடுத்து  பல்லடம் உட்கோட்ட காவல்துறையின் சார்பில் பல்லடம் நால்ரோடு பகுதியில் பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 இதில் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு போதைப்பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சட்டரீதியாக ஏற்படும் பிரச்சினைகள், போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் குடும்ப பிரச்சினைகள், குறித்து விளக்கிப்பேசினார். இந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில் பிரபு, கிருஷ்ணகுமார், மற்றும் போலீசார் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story