போலீஸ் நிலையம் அருகே உறவினரை வெட்டிக்கொன்ற ெதாழிலாளி
வத்திராயிருப்பு போலீஸ்நிலையம் அருகே உறவினரை வெட்டிக்கொலை செய்துவிட்டு தொழிலாளி தப்பினார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு போலீஸ்நிலையம் அருகே உறவினரை வெட்டிக்கொலை செய்துவிட்டு தொழிலாளி தப்பினார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இடப்பிரச்சினை
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேலத்தெருவை சேர்ந்தவர் பிலாவடியான் (வயது 73). இவரது மனைவியின் தங்கை மகன் பூமாடன் (45). கூலித்தொழிலாளி.
இவர்கள் இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக தகராறு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மாலை பிலாவடியான், வத்திராயிருப்பு போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கோவில் பகுதியில் அரச மரத்து அடியில் அமர்ந்து இருந்தார்.
வெட்டிக்கொலை
அப்போது அங்கு வந்த பூமாடன், பிலாவடியான் தலையின் பின்புறம் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதில் படுகாயம் அடைந்த பிலாவடியான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பரபரப்பு
கொலை செய்யப்பட்டவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய பூமாடனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். போலீஸ்நிலையம் அருகே நடந்த இந்த படுகொலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story