பயனற்று கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம்


பயனற்று கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம்
x
தினத்தந்தி 27 Jun 2021 12:52 AM IST (Updated: 27 Jun 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

பயனற்று கிடக்கும் மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நொய்யல்
நொய்யல் அருகே சேமங்கி செல்வநகரில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி பெண்களின் நலன் கருதி ஊராட்சி நிர்வாகம் சார்பில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த வளாகத்தை பெண்கள் பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகத்தில் உள்ள கழிவுநீர் குழாயில் பழுது ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நின்றது. இதனால் அதனை பெண்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சுகாதார வளாகம் பயனற்று செயல்பாடின்றி இருந்து வருகிறது. இதனால் சுகாதார வளாகத்திற்குள் அப்பகுதியை சேர்ந்த ஆண்கள் மது அருந்தி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே உடனடியாக பயன்று கிடக்கும் மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story