உடுமலையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
உடுமலையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
உடுமலை:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும். தொழிலாளர் விரோத 4 தொகுப்புசட்டங்களை திரும்ப பெற வேண்டும். குறைந்த பட்ச ஆதாரவிலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கவேண்டும். இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். கருத்துரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளை பறிக்கக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை கிளை அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் உடுக்கம்பாளையம் பரமசிவம், மாவட்ட துணை செயலாளர் ராஜகோபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உடுமலை ஒன்றிய செயலாளர் கி.கனகராஜ், நகர செயலாளர் கே.தண்டபாணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்வி.சவுந்தரராஜன், தாலுகா செயலாளர் கே.எஸ்.ரணதேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story