வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கூடங்குளம்:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே பனைவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் சமுத்திரபாண்டி (வயது 55). கொத்தனார். இவருடைய மகன், கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த சமுத்திரபாண்டி அடிக்கடி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய சமுத்திரபாண்டி, அங்குள்ள காட்டுப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே சமுத்திரபாண்டியை காணாததால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர். நேற்று காட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கிய சமுத்திரபாண்டியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கூடங்குளம் போலீசார் விரைந்து சென்று, சமுத்திரபாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடக்கன்குளத்தை சேர்ந்த ராஜ் மகன் லட்சுமணன் (22). இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்து உள்ளனர். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த லட்சுமணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பணகுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story