நாட்டு வெடிகுண்டு வெடித்து வாலிபர் படுகாயம்


நாட்டு வெடிகுண்டு வெடித்து வாலிபர் படுகாயம்
x
தினத்தந்தி 27 Jun 2021 1:34 AM IST (Updated: 27 Jun 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

திருக்குறுங்குடியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது அது வெடித்து வாலிபர் படுகாயம் அடைந்தார்.

ஏர்வாடி:
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி லெவிஞ்சிபுரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் சண்முக சுரேஷ் (வயது 34). இவர் திருக்குறுங்குடியில் இருந்து கொடுமுடியாறு அணைக்கு செல்லும் வழியில் உள்ள தனது தோட்டத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென்று நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் சண்முக சுரேஷ் படுகாயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார்.

இதுகுறித்த தகவல் மகிழடி கிராம நிர்வாக அதிகாரி மீராவுக்கு நேற்று தெரியவந்தது. இதுகுறித்து அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதா?, இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story