துமகூருவில் தந்தை கண் எதிரே பரிதாபம் - ஏரியில் தவறி விழுந்து சிறுவன் சாவு


துமகூருவில் தந்தை கண் எதிரே பரிதாபம் - ஏரியில் தவறி விழுந்து சிறுவன் சாவு
x
தினத்தந்தி 27 Jun 2021 2:15 AM IST (Updated: 27 Jun 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

துமகூருவில் ஏரியில் தவறி விழுந்து தந்தை கண் எதிரே சிறுவன் உயிரிழந்தான்.

துமகூரு:

துமகூரு மாவட்டம் புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கொல்லரஹள்ளி அருகே வசித்து வருபவர் மஞ்சுநாத். இவரது மகன் தியான்குமார்(வயது 15). நேற்று முன்தினம் மாலையில் மஞ்சுநாத் தனது மகனுடன் ஆடுகள் மேய்க்க சென்றிருந்தார். கொல்லரஹள்ளி அருகே உள்ள ஏரிப்பகுதியில் நின்று 2 பேரும் ஆடுகள் மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது இரவில் ஆடுகளுக்கான இலைகளை பறித்துவிட்டு வருவதாக கூறி மஞ்சுநாத் சென்றார். சிறிது தூரத்தில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஏரிக்குள் கால் தவறி தியான்குமார் விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மஞ்சுநாத் மகனை மீட்க ஓடிவந்தார்.

  அதற்குள் ஏரி தண்ணீரில் மூழ்கி தியான்குமார் பரிதாபமாக இறந்துவிட்டான். தனது கண்எதிரேயே மகன் பலியாகி விட்டதாக கூறி மஞ்சுநாத் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதுகுறித்து துமகூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கொல்லரஹள்ளி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story