வள்ளியூரில் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் ஆய்வு


வள்ளியூரில் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 27 Jun 2021 2:15 AM IST (Updated: 27 Jun 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூரில் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் விஷணு ஆய்வு செய்தார்.

வள்ளியூர்: 
வள்ளியூர் நரிக்குறவர் காலனியில் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. பணகுடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோலப்பன் தலைமையில் டாக்டர் ஜியோபர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் சிறப்பு முகாம் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

இந்த முகாமை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நரிக்குறவ மக்கள் வசிக்கும் காலனியில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதில் ராதாபுரம் தாசில்தார் கனகராஜ், வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, வருவாய் அலுவலர் திராவிடமணி, வள்ளியூர் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் கிறிஸ்டோபர்தாஸ், சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம், மேற்பார்வையாளர் டேனியல், முகமது இஸ்மாயில், செஞ்சிலுவை சங்க செயலாளர் சபேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story