பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி


பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 27 Jun 2021 2:20 AM IST (Updated: 27 Jun 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் திருமண மண்டபங்கள், சின்னவளையம் அரசு உயர்நிலைப்பள்ளி போன்ற இடங்களிலும், கொரோனா தொற்று பாதிப்பு உள்ள பகுதிகளிலும் தடுப்பூசி முகாம் அமைத்து நகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் முன் களப்பணியாளர்கள், அரசு ஊழியர்கள், வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் மூன்றாம் அலை பரவல் ஏற்படுவதை தடுக்கும் வகையில், தற்போது முன்னுரிமை அடிப்படையில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் அமைக்கப்பட்டுள்ள முகாமில் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலரும் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் தலைமை தாங்கினார். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story