பெட்ரோல் விலை உயர்வுக்கு நூதன முறையில் டிரைவர்கள் எதிர்ப்பு
பெட்ரோல் விலை உயர்வுக்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து வாகன ஓட்டிகளுக்கு டிரைவர்கள் இனிப்பு வழங்கினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.100-ஐ தொட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதன் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story