கன்னியாகுமரி கடற்கரையில் கலெக்டர் ஆய்வு
கன்னியாகுமரி கடற்கரையில் கலெக்டர் ஆய்வு
கன்னியாகுமரி:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேற்று கன்னியாகுமரி கடற்கரையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகுதுறையை பார்வையிட்டார். தொடர்ந்து அதிகாரிகளிடம் சுற்றுலாவை மேம்படுத்த கூடுதல் படகுகளை இயக்குவதற்கு வசதியாக புதிய படகு தளம் எங்கு அமைக்கலாம் என்றும் ஆலோசனை மேற்கொண்டார். அத்துடன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சுற்றுப்புறத்தை ஆய்வு செய்து கோவில் மேலாளரிடம் விவரங்களை கேட்டறிந்தார். அத்துடன் காந்திமண்டபம், முக்கடல் சங்கமம் ஆகியவற்றை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, சுற்றுலா துறை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story