தனியார் நிறுவன அதிகாரி கொலையில் மேலும் ஒருவர் கைது


தனியார் நிறுவன அதிகாரி கொலையில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 27 Jun 2021 3:46 AM IST (Updated: 27 Jun 2021 3:46 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே தனியார் நிறுவன அதிகாரி கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே சுப்பையாபுரத்தில் தனியார் சோலார் மின் நிறுவனத்தில் சென்னை கொரட்டூரைச் சேர்ந்த தியாகராஜன் (வயது 51) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் மாதம் இவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 

இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 15 பேரை ஏற்கனவே கைது செய்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூர் கிராமத்தைச் சேர்ந்த  மருதுபாண்டியன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story