மாவட்ட செய்திகள்

மாமல்லபுரம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் பிணம் + "||" + Near Mamallapuram While hanging The corpse of an old man

மாமல்லபுரம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் பிணம்

மாமல்லபுரம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் பிணம்
மாமல்லபுரம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்துள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கிருஷ்ணன் காரணை பஸ் நிறுத்தம் அருகே உள்ள வேப்ப மரத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நைலான் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

பிள்ளைகளால் கைவிடப்பட்ட தந்தையாக இவர் இருக்கலாம் என்றும் வாழ்க்கையில் விரக்தியடைந்த இவர் தற்கொலை முடிவை எடுத்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

காவி வேட்டி அணிந்திருந்த இவருடைய சட்டை பையில் சென்னை மாநகர பஸ்சில் பயணம் செய்ததற்கான பயண சீட்டு ஒன்று இருந்தது.

இதனால் இவர் சென்னை புறநகர் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மற்றபடி இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் இவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாமல்லபுரம் அருகே வயல்வெளியில் தீ விபத்து
தெற்குப்பட்டு வயல்வெளி ஓரம் மது குடித்து விட்டு வயல்வெளிகளில் தீ வைத்துள்ளனர்.