கோட்டூரில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கோட்டூரில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Jun 2021 3:19 PM IST (Updated: 27 Jun 2021 3:22 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே கோட்டூரில் மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப்பெற கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே கோட்டூரில் மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப்பெற கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப்பெற கோரியும் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் குமரன் கட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகியவற்றின் ஆனைமலை தாலுகா குழுக்களின் சார்பில் நடந்தது. 

கோஷங்கள் எழுப்பினர்

இதற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆனைமலை ஒன்றிய பொறுப்பாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் துரைசாமி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோவை மாவட்ட குழு தலைவர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கண்ணப்பன், ஒன்றிய செயலாளர் காளீஸ்வரன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஆனைமலை ஒன்றிய செயலாளர் பட்டீஸ்வரமூர்த்தி ஆகியோர் மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் கம்யூனிஸ்டு கட்சியினர், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story