கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியில் 6 மனுக்களுக்கு உடனடி தீர்வு


கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியில் 6 மனுக்களுக்கு உடனடி தீர்வு
x
தினத்தந்தி 27 Jun 2021 3:25 PM IST (Updated: 27 Jun 2021 3:27 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியில் 6 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் 2 நாட்கள் ஜமாபந்தி நடைபெற்றது. ஜமாபந்தி அதிகாரியாக மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் அம்சவேணி பங்கேற்றார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஜமாபந்திக்கு ஆன்லைன் மூலமாக மனுக்களை அளிக்குமாறு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

 அதன்படி 2 நாட்கள் நடைபெற்ற முகாமில் 27 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மனுக்களை பரிசீலனை செய்ததில் நத்தம்பட்டா மாறுதல் 5 பேருக்கும், அடங்கல் ஒருவருக்கும் என மொத்தம் 6 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும் ஜமாபந்தி முகாமில் பெறப்பட்ட மற்ற மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்படும் என ஜமாபந்தி அதிகாரி தெரிவித்தார்.

இதில் கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா, தலைமையிடத்து துணை தாசில்தார் குமரிஅனந்தன், கிணத்துக்கடவு மண்டல துணை தாசில்தார் சிவகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கனகேஸ்வரி, ஆய்வாளர்கள் லலிதா, செந்தில்குமார் மற்றும் நிலஅளவை அலுவலர்கள், பணியாளர்கள், கிராமநிர்வாக அதிகாரிகள், வருவாய்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story