“குடியரசுத் தலைவர் பதவியை கனவில் கூட கண்டது இல்லை“ - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நெகிழ்ச்சி


“குடியரசுத் தலைவர் பதவியை கனவில் கூட கண்டது இல்லை“ - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 27 Jun 2021 4:14 PM IST (Updated: 27 Jun 2021 4:19 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தின் கான்பூர் தேஹாத் மாவட்டத்தைச் சேர்ந்த பராங்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மண்ணை தொட்டு வணங்கி உள்ளார்.

லக்னோ,

3 நாள் பயணமாக உத்தரப்பிரதேசம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் தமது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அங்கு  தம்மை வரவேற்க வந்தவர்கள் மத்தியில் பேசிய அவர், தாம் இன்று இருக்கும் நிலைக்கு காரணம், விடுதலை போராட்ட வீரர்கள், அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய குழுவில் இடம் பெற்றிருந்தவர்களின் பங்களிப்பும் தியாகமும், இந்த கிராமமும், மக்கள் அனைவரின் அன்பு தான் என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். 

சிறுவனாக இருந்த போது கனவில் கூட நாட்டின் முதல் குடிமகனாக பணியாற்றுவது போல கனவு கூட கண்டது இல்லை என்றும், ஆனால் அத்தகைய ஒரு வாய்ப்பை நமது ஜனநாயக நடைமுறைகள் சாத்தியப்படுத்தி உள்ளதாக ராம்நாத் கோவிந்த் நெகிழ்ச்சி உடன் தெரிவித்துள்ளார். இதனைத் தொட​ந்து மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்று, அங்கு அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.


Next Story