காயல்பட்டினத்தில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது
காயல்பட்டினத்தில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்
ஆறுமுகநேரி:
காயல்பட்டினத்தில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் மற்றும் போலீசார் நேற்று காலையில் ரோந்து சென்றனர்.
அப்போது காயல்பட்டினம் நெசவு தெரு பகுதியில் போலீசை கண்டவுடன் வாலிபர் ஒருவர் ஓட முயற்சித்துள்ளார். அவரை போலீசார் விரட்டி பிடித்த போது அவரிடம் 100 கிராம் கஞ்சா பொட்டலமாக போடப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுஇருப்பது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில் அவர் காயல்பட்டினம் சீதக்காதி நகரைச் சேர்ந்த காஜா முகைதீன் மகன் ஹசன் பண்ணா(வயது27) என தெரியவந்தது. இதுதொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹசன் பண்ணாவை கைது செய்தனர்.
Related Tags :
Next Story