வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது


வாலிபரை அரிவாளால்  வெட்டிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Jun 2021 9:43 PM IST (Updated: 27 Jun 2021 9:43 PM IST)
t-max-icont-min-icon

வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமேசுவரம், 
ராமேசுவரம் கடற்கரை பகுதியில் பழுதான படகுகளை பழுதுபார்க்கும் கம்பெனியை நம்பு சுப்பிரமணியன் என்பவர் வைத்துள்ளார். இந்த இடம்தொடர்பாக  நம்பு சுப்ரமணியனின் மகன்கள் பாலசுதர்சன், ஸ்ரீகாந்த் (வயது29) ஆகியோருக்கும் மூக்குத்தி முருகன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஸ்ரீகாந்துக்கு அரிவாள்வெட்டு விழுந்தது. காயம்அடைந்த பாலசுதர்சன், ஸ்ரீகாந்த் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் ராமேசுவரம் துறைமுக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூக்குத்தி முருகன், கருப்பையா ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடிவருகின்றனர். 

Next Story