தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் அரசு பஸ்கள் இயக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
கொரோனா வைரஸ்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. கடந்த சில வாரங்களாக படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த வாரம் 4 மாவட்டங்களில் மட்டுமே பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. தற்போது தூத்துக்குடி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பஸ்களை இயக்க அரசு அனுமதி அளித்து உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திலும் பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டெப்போக்களில் இருந்து மொத்தம் 75 சதவீதம் பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக அனைத்து பஸ்களும் கிருமிநாசினிகள் தெளித்து தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
19 பஸ்கள்
இதே போன்று அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் இருந்து 19 பஸ்கள் இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது. இன்று காலை முதல் குறிப்பிட்ட இடைவெளியில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் சென்னைக்கு இயக்கப்படுகின்றன. திருப்பதி பஸ் வேலூர் வரை மட்டும் இயக்கப்படுகிறது. கோவை உள்ளிட்ட பஸ் இயக்க அனுமதி மறுக்கப்பட்ட நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. சென்னை பஸ்களுக்கு நேற்று முதல் ஆன்லைன் புக்கிங் தொடங்கி நடந்து வருகிறது. பயணிகள் வருகையை பொருத்து கூடுதல் பஸ்கள் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story