மீன்கள் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள் களைகட்டியது கடலூர் துறைமுகம்
மீன்க்ள வாங்க அசைவ பிரியர்கள் அதிகளவில் குவிந்ததால், கடலூர் துறைமுகம் நேற்று களைகட்டி காணப்பட்டது.
கடலூர் முதுநகர்,
கடலூர் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம், அக்கரைகோரி, சோனங் குப்பம், ராசாபேட்டை, சித்திரை பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.
அவ்வாறு பிடித்து வரப்படும் மீன்களை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்வதை காண முடியும்.
தற்போது கொரானா பரவலை தடுக்கும் பொருட்டு, கடலூர் மீன்பிடி துறைமுக பகுதியில் மீன்கள் விற்பனைக்கு அனுமதி இல்லை. இதற்கு மாற்று இடமாக, கடலூர் துறைமுகம் பகுதியிலுள்ள, சிங்காரத்தோப்பு பாலத்தின் கீழே மீன்கள் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அசைவ பிரியர்கள் குவிந்தனர்
நேற்று சங்கரா, பாறை, வஞ்சிரம், கனவா, இறால் போன்ற மீன் வகைகள் அதிக அளவில் மீனவர்களின் வலையில் சிக்கியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக அளவில், ஆர்வமிகுதியால் அதிகாலை முதலே, அசைவ பிரியர்கள் மற்றும் வியாபாரிகள் மீன்களை வாங்குவதற்கு கடலூர் துறைமுகம் பகுதியில் திரண்டனர். இதனால் துறைமுக பகுதி களைக்கட்டி காணப்பட்டது.
களைகட்டியது
இதுபற்றி மீனவர் ஒருவர் கூறுகையில், பொதுவாக மக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ உணவுகளை விரும்பி உண்ணுவார்கள். அந்த வகையில் பெரும்பாலானோர் மீன்களை விரும்பி உண்ணுகின்றனர். அதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் பொதுமக்கள், மீன்களை வாங்குவதற்கு, இங்கு வருகின்றனர்.
நேற்று சங்கரா, பாறை வகை மீன்கள் ரூபாய் 500 முதல் 600 வரை கிலோ ஒன்று விலைபோனது. கனவா 200 முதல் 290 வரையும், வஞ்சிரம் 800 முதல் 900 ரூபாய் வரை விற்பனையானது. இதேபோல் இறால் ஒரு கிலோ ரூபாய் 300-க்கு விற்றது என அவர் கூறினார்.
கடலூர் துறைமுகத்தில் மீன் பிரியர்கள் அதிக அளவு கூடியதால் துறைமுகப் பகுதி சுறுசுறுப்புடனும், களைகட்டி இருந்ததை காணமுடிந்தது.
Related Tags :
Next Story