இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 27 Jun 2021 10:21 PM IST (Updated: 27 Jun 2021 10:21 PM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர், ராமநாதபுரம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர், ராமநாதபுரம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணி
முதுகுளத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வெந்நீர் வாய்க்கால், கீழபனையடியேந்தல், கண்ணாபுரம், காத்தகுளம், கீழமானங்கரை, மு.சாலை, அரசு கலைக்கல்லூரி, காக்கூர், புளியங்குடி, கதையன், சோழபுரம், காமராஜபுரம், தேவர்புரம் சமத்துவபுரம், தஞ்சாக்கூர், ஆதனக்குறிச்சி, ஆண்டிச்சியேந்தல், குமாரகுறிச்சி, ராமலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது என முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்தார்.
ராமநாதபுரம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கங்காதரன் வெளியிட்டுள்ள மின்தடை பற்றிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- மின் வாரிய அவசர கால பராமரிப்பு பணி காரணமாக இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை கீழ்க்கண்ட பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
தேவிபட்டினம்
அதன்படி தேவிபட்டினம் துணை மின்நிலையத்தில் உள்ள திருப்பாலைக்குடி மின்பாதையில் பணிகள் நடைபெறுவதால் சிங்கனேந்தல், மாதவனூர், பொட்டகவயல், அரசனூர், வாகவயல், கருப்பூர், குன்றத்தூர், சோழந்தூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள சுற்று வட்டாரப் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
ஆனந்தூர்
ஆனந்தூர் துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் பணிக்கோட்டை உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆனந்தூர், வளனை, சாத்தனூர், பணிக்கோட்டை, கூடலூர், ஆயங்குடி, கொக்கூரணி, கல்லடித்திடல், கருங்குடி, வடக்கலூர், காவனக்கோட்டை புதுக்குறிச்சி, கோவிந்தமங்கலம், தூனுகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும் என திருவாடானை மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
கமுதி
கமுதி அருகே கோட்டைமேடு துணை மின் நிலையத்தில் செங்கப்படை மின் பாதையில் இன்று பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை இங்கிருந்து மின்வினியோகம் நடைபெறும். 
இதையடுத்து செங்கப்படை, புதுக்கோட்டை, இடையங்குளம், தோப் படைப்பட்டி, ஓ.கரிசல்குளம், கோவிலாங்குளம், எருமைகுளம் உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்வினி யோகம் நிறுத்தப்படும் என கமுதி உதவிச் செயற்பொறியாளர் சந்திரன் தெரிவித்துள்ளார்.

Next Story