வாகனம் மோதி அரசு பஸ் டிரைவர் சாவு


வாகனம் மோதி அரசு பஸ் டிரைவர் சாவு
x
தினத்தந்தி 27 Jun 2021 10:23 PM IST (Updated: 27 Jun 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே வாகனம் மோதி அரசு பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

திண்டிவனம், 

செஞ்சி அருகே வடகொல்லை நெகனூரை சேர்ந்தவர் முனுசாமி (வயது 52) திருமணம் ஆகாதவர். இவர் சென்னை பெரம்பூர் மாநகர அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.  இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் முனுசாமி சென்னைக்கு புறப்பட்டார்.  திண்டிவனம், சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கரிக்கம்பட்டு கிராம பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முனுசாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் அவர் பலத்த காயமடைந்தார்.

போலீசார் விசாரணை

 இது குறித்த தகவலின் பேரில் ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முனுசாமியை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முனுசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமாக வாகன டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 




Related Tags :
Next Story