மூங்கில்துறைப்பட்டு அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை


மூங்கில்துறைப்பட்டு அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை
x
தினத்தந்தி 27 Jun 2021 10:38 PM IST (Updated: 27 Jun 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை பொதுமக்கள் புகார்

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தில் சேராப்பட்டு சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மது கடை மாலை 5 மணி வரை செயல்பட்டு வருகிறது.  நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் வியாபாரம் முடிந்ததும் ஊழியர்கள் கடையை மூடிவிட்டு சென்றனர். பின்னர் அந்த பகுதியில் மறைவான இடத்தில் மர்ம நபர்கள் சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தனர். இதை அறிந்து அங்கு வந்த மது பிரியர்கள் மர்ம நபர்களிடம் மதுபாட்டில்களை வாங்கினர். ஆனால் டாஸ்மாக் கடையை விட கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது. அதாவது குவாட்டர் மது பாட்டில் ஒன்று ரூ.200 முதல் 250 வரைக்கும், பீர் பாட்டில் ரூ.150 முதல் 300 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. ஏதோ கிடைக்கிறதே என்பதற்காக சில மதுபிரியர்கள் கூடுதல் விலைகொடுத்து மது பாட்டில்களை வாங்கி சென்றனர். சிலர் விலைஉயர்வை  கேட்டு அதிர்ச்சியுடன் திரும்பி சென்றனர். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மது பாட்டில்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால் குழந்தைகள், பெண்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் எனவே மதுபாட்டில்களை மறைத்து வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Next Story