கோட்டப்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் விவசாயி கைது
கோட்டப்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருந்த விவசாயியை கைது செய்தனர்.
அரூர்:
தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி போலீசார் காரப்பாடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதேபகுதியை சேர்ந்த விவசாயி ஆண்டி (வயது 50) என்பவர் வீட்டில் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று அவருடைய வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவர் 2 நாட்டுத்துப்பாக்கிகளை வீ்ட்டில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் 2 நாட்டுத்துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story