கம்பைநல்லூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை


கம்பைநல்லூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 27 Jun 2021 10:48 PM IST (Updated: 27 Jun 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

கம்பைநல்லூர் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

மொரப்பூர்:

கம்பைநல்லூர் அருகே உள்ள வகுரப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்.  இவரது மனைவி கனகா (வயது 25). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கனகா போச்சம்பள்ளி உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது அவருக்கும், அதே நிறுவனத்தில் வேலை பார்த்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கணவர் சக்திவேல் கண்டித்துள்ளார். இதனால் கனகா தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் கனகா மீண்டும் கணவர் வீட்டிற்கு சென்றார். அப்போது கணவன்-மனைவி 2 பேரும் பேசாமல் இருந்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த கனகா விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கனகா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story