சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 27 Jun 2021 10:48 PM IST (Updated: 27 Jun 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் சிம்ஸ் பூங்கா-தொழிற்பயிற்சி நிலையம் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குன்னூர்,

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இருந்து தொழிற்பயிற்சி நிலையத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறங்களும் மரங்கள் உள்ளன. இந்த நிலையில் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. 

இதன் காரணமாக சிம்ஸ் பூங்கா சாலையோரத்தில் நின்ற ராட்சத மரம் ஒன்று நேற்று காலை 10 மணியளவில் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதனால் சிம்ஸ் பூங்கா மற்றும் தொழிற்பயிற்சி நிலையம் செல்லும் சாலையை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக குன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

 இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். இதையடுத்து போக்குவரத்து தொடங்கியது. 

Next Story