ராமேசுவரத்தில் இருந்து புவனேசுவருக்கு வாராந்திர ரெயில்


ராமேசுவரத்தில் இருந்து புவனேசுவருக்கு வாராந்திர ரெயில்
x
தினத்தந்தி 27 Jun 2021 10:53 PM IST (Updated: 27 Jun 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் இருந்து புவனேசுவருக்கு வாராந்திர ரெயில் வருகிற 4-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது

ராமேசுவரம், 
ராமேசுவரத்தில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேசுவருக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ரெயில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், வருகிற 2-ந் தேதி முதல் இந்த ரெயில் மீண்டும் இயக்கப்பட உள்ளது.
அதன்படி, இந்த ரெயில் (வ.எண்.08496) புவனேசுவரத்தில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.30 மணிக்கு ராமேசுவரம் வந்தடையும். மறு மார்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து வருகிற 4-ந் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் ரெயில் இயக்கப்படும். இந்த ரெயில் (வ.எண். 08495) ராமேசுவரத்தில் இருந்து காலை 8.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 6.10 மணிக்கு புவனேசுவரம் ரெயில் நிலையம் சென்றடையும்.

Next Story