கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட வேண்டி கோவிலில் சிறப்பு வழிபாடு


கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட வேண்டி கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 27 Jun 2021 10:58 PM IST (Updated: 27 Jun 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட வேண்டி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பெரம்பலூர்,

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் உள்ள ஓம் சிங்கவிநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு விநாயகர் மற்றும் சிவலிங்கத்திற்கு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் தன தானியம் பெருகவும், தொழில்கள் வளர்ச்சி அடையவும், கொரோனா தொற்றில் இருந்து உலக மக்கள் விடுபடவும் வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

Next Story