பள்ளிபாளையம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது


பள்ளிபாளையம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது
x
தினத்தந்தி 27 Jun 2021 11:33 PM IST (Updated: 27 Jun 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சியவரை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிபாளையம்,

பள்ளிபாளையம் அருகே மொளசி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கரட்டாங்காடு பகுதியில் உள்ள வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமு, பிரபு மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.  அப்போது கரட்டாங்காட்டை சேர்ந்த மனோகரன் (வயது 46) என்பவர் தனது வீட்டில் சாராயம் காய்ச்சியது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து மனோகரனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய 200 லிட்டர் ஊறலையும் கீழே கொட்டி அழித்தனர். 

Next Story