கஞ்சா விற்ற மேலும் 10 பேர் கைது


கஞ்சா விற்ற மேலும் 10 பேர் கைது
x
தினத்தந்தி 27 Jun 2021 11:35 PM IST (Updated: 27 Jun 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற மேலும் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற மேலும் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கஞ்சா விற்பனை
குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் போலீசார் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.
எனினும் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு கஞ்சா விற்பனையை மர்ம நபர்கள் அரங்கேற்றி வருகிறார்கள். அதிலும் கன்னியாகுமரியில் நடைபெற்ற இரட்டை கொலைக்கு பின்னணியில் கஞ்சா விற்பனை இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த நிலையில் கஞ்சா விற்ற மேலும் 10 பேர் போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.
10 பேர் கைது
அதாவது கொட்டாரத்தை சேர்ந்த ஜவஹர் (வயது 30) என்பவரை கன்னியாகுமரி போலீசாரும், கருங்கல் போலீசார் பூட்டேற்றி பகுதியை சேர்ந்த அருள்தாஸ் (59) என்பவரையும், கோட்டார் போலீசார் கம்பளம் பகுதியை சேர்ந்த ரெஜினி (35) என்பவரையும், கட்டையன்விளையை சேர்ந்தவர் ரதீஷ் (33), வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (20) மற்றும் இடலாக்குடி பகுதியை சேர்ந்த பாலாஜி (24) ஆகியோரையும், வடசேரி போலீசார் அறுகுவிளை பகுதியை சேர்ந்த ராஜன் (57) என்பவரையும் பிடித்தனர்.
குளச்சல் போலீசார் கோடிமுனையை சேர்ந்த ஜெனிலன் (22), அருளன் (22) மற்றும் சைமன்காலனியை சேர்ந்த சதீஷ் (21)  ஆகியோரை பிடித்தனர். பின்னர், 10 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 3 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story