மேட்டுப்பாளையம் அருகே விபத்து பெண் பலி 5 பேர் படுகாயம்


மேட்டுப்பாளையம் அருகே விபத்து பெண் பலி 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 27 Jun 2021 11:37 PM IST (Updated: 27 Jun 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் அருகே விபத்து பெண் பலி 5 பேர் படுகாயம்

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45). இவர் சாதி ஒழப்பு விடுதலை மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். இவர் மேட்டுப்பாளையம்-அன்னூர் மெயின் ரோட்டில் உள்ள தாளத்துறை பகுதியில் காரில் சென்று கொண்டு இருந்தார்.  

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் காருக்குள் இருந்த நாகராஜ், பழனியம்மாள் (65), சாந்தா (65), சேகர் (40), சரக்கு வாகனத்தில் இருந்த சிக்கந்தர்பாஷா (30), நசிருதீன் (50) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த சிறுமுகை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியில் சாந்தா பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயம் அடைந்த 5 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சிறுமுகை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 


Next Story