சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 75 பேருக்கு கொரோனா பரிசோதனை


சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 75 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 27 Jun 2021 11:50 PM IST (Updated: 27 Jun 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 75 பேருக்கு கொரோனா பரிசோதனை

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால் தொற்று பரவல் குறைந்து வருகிறது. 

மேலும் கிராமம் கிராமங்களாக சென்று கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சந்திராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நடமாடும் மருத்துவக்குழுவை சேர்ந்த டாக்டர் பவித்ரா தலைமை யிலான குழுவினர் வதம்பச்சேரி, நல்லூர்பாளையத்தில் உள்ள கறிக்கோழி பண்ணைகளில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  

இதில் மொத்தம் 75 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பெறப்பட்ட சளி மாதிரிகள் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் வனிதா, சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story