கொரோனா நிவாரண தொகுப்பு-தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கினார்


கொரோனா நிவாரண தொகுப்பு-தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 28 Jun 2021 12:07 AM IST (Updated: 28 Jun 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி பகுதிகளில் கொரோனா நிவாரண தொகுப்புகளை தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கினார்.

இளையான்குடி,

இளையான்குடி வடக்கு ஒன்றியத்தில் நாகமுகுந்தன்குடி, தடியமங்கலம், வடக்கு அண்டகுடி ஆகிய ஊராட்சியில் கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன் தலைமை தாங்கினார். பேரூர் கழக செயலாளர் நஜீமுதீன் முன்னிலை வகித்தார். தமிழரசி எம்.எல்.ஏ. அரிசி மற்றும் காய்கறிகளின் தொகுப்பை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், மாவட்ட நெசவாளர் அணி முருகானந்தம், சிறுபான்மை பிரிவு நாசர், மாவட்ட தொண்டரணி புலிக்குட்டி, மாவட்ட பிரதிநிதி யாசின், அவைத் தலைவர் பெரியசாமி, செய்யதுகான், ஒன்றிய கவுன்சிலர் பழனியம்மாள் பாண்டி, மகேஸ்வரன், மாவட்ட விவசாய அணி காளிமுத்து, கண்ணமங்கலம் கூட்டுறவு தலைவர் தமிழரசன், தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி அன்பரசன், ஒன்றிய துணைச்செயலாளர் தாமஸ், முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகன், சைமன், கிளை செயலாளர்கள் ராஜகோபால், சுந்தரம், சத்தியேந்திரன், கார்சாமி, உதயசூரியன், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி-கண்ணன், நெசவாளர் அணி- தட்சிணாமூர்த்தி, இளைஞரணி சங்கர், நீலமேகம், முத்துக்குமார் மற்றும் ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி பாலசுப்பிரமணியன், நாகஜோதி சேகர், விஜயராணி பிரபு ராஜா, சாரதி (எ) சாருஹாசன் ஆகியோர் செய்தனர்.




Next Story