ஜம்மு காஷ்மீர் குண்டுவெடிப்பு எதிரொலி: திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
ஜம்மு காஷ்மீர் குண்டுவெடிப்பு எதிரொலியாக திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
செம்பட்டு,
ஜம்முவில் உள்ள விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 2 இடங்களில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் மத்திய அரசின் சிவில் ஏவியேஷன் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது. இதை தொடர்ந்தது திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொரோனா 2-வது அலையில் பயணிகளின் வருகை குறைவாக இருப்பினும், மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் திருச்சிக்கு வருகின்றனர். அதன்படி, விமான நிலையத்தின் உள்புறம், பயணிகளின் வருகை பயணிகள் வெளியேறும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story