கம்பத்தில் ஏறிய மரநாய் மின்சாரம் பாய்ந்து செத்தது


கம்பத்தில் ஏறிய மரநாய் மின்சாரம் பாய்ந்து செத்தது
x
தினத்தந்தி 28 Jun 2021 12:14 AM IST (Updated: 28 Jun 2021 12:14 AM IST)
t-max-icont-min-icon

மின்கம்பத்தில் ஏறிய மரநாய் மின்சாரம் பாய்ந்ததில் செத்தது.

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் ஏலாக்குறிச்சி பகுதியில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் செய்ததையடுத்து மின்வாரிய ஊழியர்கள் அனைத்து மின் தடங்களையும் ஆய்வு செய்தனர். இதில் அரசன் ஏரி பகுதியில் மரநாய் மின்கம்பத்தில் மேலேறி சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்து, மின்கம்பியிலேயே கிடந்தது. இதன் காரணமாகவே மின் தடை அடிக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறிய மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏறி மரநாயை அப்புறப்படுத்தினர். பின்னர் மின் இணைப்பு கொடுத்தனர். இப்படியும் மின்தடை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story