உடுமலையில், தேசிய நெடுஞ்சாலையில் மண் குவியல் இருப்பதால் இருசக்கரவாகன ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

உடுமலையில், தேசிய நெடுஞ்சாலையில் மண் குவியல் இருப்பதால் இருசக்கரவாகன ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
x
தினத்தந்தி 28 Jun 2021 12:15 AM IST (Updated: 28 Jun 2021 12:15 AM IST)
t-max-icont-min-icon

உடுமலையில், தேசிய நெடுஞ்சாலையில் மண் குவியல் இருப்பதால் இருசக்கரவாகன ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

உடுமலை,
உடுமலையில், தேசிய நெடுஞ்சாலையில் மண் குவியல் இருப்பதால் இருசக்கரவாகன ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை
உடுமலை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் தீயணைப்பு நிலையத்தை அடுத்து, சாலையின் ஒருபுறம் மண் மற்றும் மணல் மேடாக உள்ளது. மேலும் சாலையின் ஒருபகுதியில் மணல் பரவி கிடக்கிறது. அதனால் அந்த இடத்தில் ஒரே நேரத்தில் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு வேகமாக செல்லும்போது, இருசக்கர வாகனத்தில் செல்கிறவர்கள் பாதுகாப்பு கருதி, வாகனத்தை இடது ஓரமாக அந்த மண் மேடுபகுதிக்கு திருப்புகின்றனர்.
விபத்துகள்
அப்போது சில நேரங்களில் இருசக்கர வாகனம் மண் மற்றும் மணல் பகுதியில் சிக்கி  வாகன ஓட்டுனர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
அதனால் அங்குள்ள மண்மேட்டையும், பரவி கிடக்கும் மணலையும் சம்பந்தப்பட்ட துறையினர் அப்புறப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story