ஊரடங்கு தளர்வு காரணமாக திருப்பூர் மாநகரில் பல்வேறு சாலைகளில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் அகற்றப்பட்டன.
ஊரடங்கு தளர்வு காரணமாக திருப்பூர் மாநகரில் பல்வேறு சாலைகளில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் அகற்றப்பட்டன.
திருப்பூர்
ஊரடங்கு தளர்வு காரணமாக திருப்பூர் மாநகரில் பல்வேறு சாலைகளில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் அகற்றப்பட்டன.
ஊரடங்கு தளர்வுகள்
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கின் போதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
அதன்படி பொது போக்குவரத்திற்கு தடையும் விதிக்கப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் குறைய தொடங்கியது. இருப்பினும் கொரோனா தொற்று முழுவதும் குறையும் வகையில் ஊரடங்கு வருகிற 5-ந் தேதி வரை தமிழக அரசு நீட்டித்து உத்தரவிட்டது. இருப்பினும் சில தளர்வுகளை வழங்கியுள்ளது.
இரும்பு தடுப்புகள் அகற்றம்
திருப்பூர் மாவட்டத்தில் 100 சதவீத தொழிலாளர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்க அனுமதி மற்றும் சலூன்கள், டீக்கடைகள் திறக்க அனுமதி என்பது உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த வார ஊரடங்கின் போது இந்த தளர்வுகளின் காரணமாக வாகன போக்குவரத்து குறைவாக இருந்தது. இருப்பினும் வாகன ஓட்டிகளை கண்காணிக்கவும் மாநகர போலீசார் சார்பில் இரும்பு தடுப்புகள் முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டிருந்தன.
ஆனால் தற்போது வழங்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகளின் காரணமாக வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால் நேற்று அவினாசி சாலை, குமரன் சாலை, தாராபுரம் சாலை, ஊத்துக்குளி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளை போலீசார் அகற்றினர். இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி சென்றனர்.
Related Tags :
Next Story