இன்று மின்தடை


இன்று மின்தடை
x
தினத்தந்தி 28 Jun 2021 12:39 AM IST (Updated: 28 Jun 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

திருச்சுழி பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மின்தடை செய்யப்படுகிறது.

காரியாபட்டி, 
தமிழ்நாடு மின்வாரிய அருப்புக்கோட்டை செயற்பொறியாளர் மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-  அருப்புக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட திருச்சுழி பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை  திருச்சுழி, தமிழ்பாடி, சித்தலைகுண்டு, இலுப்பையூர், பனையூர், பூமாலைபட்டி, ஆனைகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story