கொரோனாவுக்கு ஒருவர் சாவு
பெரம்பலூரில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் இறந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று மாவட்டத்தில் 23 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கொரோனாவுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 195 ஆக உயர்ந்தது.
நேற்று மட்டும் 19 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 259 பேர் மட்டுமே கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 221 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது. மாவட்டத்தில் நேற்று 545 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 2,120 கோவிஷீல்டு தடுப்பூசியும், 970 கோவாக்சின் தடுப்பூசியும் கையிருப்பில் உள்ளது.
Related Tags :
Next Story