இணையவழியில் விவசாயிகளுக்கு பயிற்சி


இணையவழியில் விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 28 Jun 2021 12:57 AM IST (Updated: 28 Jun 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவது குறித்து இணைய வழியில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மானாமதுரை,

மானாமதுரை அருகே உள்ள ஆலம்பச்சேரி கிராமத்தில் ரசாயன மருந்துகளை பாதுகாப்பாக பயன்படுத்துதல், பயிர் கழிவு மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கான இணைய வழி பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி மானாமதுரை வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டம் மூலம் நடத்தப்பட்டது.
பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் பத்மாவதி தலைமை தாங்கினார். இதில் மதுரை வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் கண்ணன், கோவை வேளாண்மை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் பூச்சிக்கொல்லி மருந்துகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து இணையவழியில் பயிற்சி அளித்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மானாமதுரை வட்டார அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பாலமுருகன், சதீஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story