கும்பகோணத்தில் தடுப்பூசி போடப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம்
கும்பகோணத்தில் தடுப்பூசி போடப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கும்பகோணம்:-
கும்பகோணத்தில் தடுப்பூசி போடப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கொரோனா தடுப்பூசி
கும்பகோணம் நகராட்சி கார்னேசன் மருத்துவமனை, மணியம்மை சுகாதார நிலையம், மேலக்காவேரி சுகாதார நிலையம், மொட்டை கோபுரம் சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, தடுப்பூசி இருப்புக்கு ஏற்றவாறு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று கும்பகோணம் நகரப்பகுதியில் தடுப்பூசி போடப்படவில்லை. இதுதொடர்பான அறிவிப்பை நகராட்சி ஆணையர் ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். இதை அறியாமல் நேற்று அதிகாலை 5 மணிக்கே 200-க்கும் மேற்பட்டோர் கும்பகோணம் கார்னேசன் மருத்துவமனையில் தடுப்பூசிக்கான டோக்கன் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்தனர்.
பொதுமக்கள் ஏமாற்றம்
ஆனால் காலை 6 மணியை கடந்தும் தடுப்பூசி மையத்துக்கு நகராட்சி அதிகாரிகள் வரவில்லை. அதன் பின்னரே தடுப்பூசி போடப்படவில்லை என்ற தகவல் தெரியவந்தது. இதனால் அங்கு ஒரு மணிநேரத்துக்கும் மேலாக காத்திருந்த பொதுமக்கள் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தடுப்பூசி போடப்படாத நிலையில் நேற்று அதிகாலையிலேயே ஏராளமானோர் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story