வேளாண் திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு


வேளாண் திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 28 Jun 2021 1:18 AM IST (Updated: 28 Jun 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

அம்பையில் வேளாண் திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அம்பை:
அம்பை வட்டார பகுதிகளில் நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன் வேளாண் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். அப்போது கல்சுண்டு காலனியில் கூட்டு பண்ணையத் திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுவினரின் நெல் கூட்டு சாகுபடி நெல் நடவு வயல்களை பார்வையிட்டார். அயன்சிங்கம்பட்டி கிராமத்தில் சுமார் 40 ஏக்கர் நிலத்தில் நடவு செய்துள்ள புது ரக திருந்திய நெல் சாகுபடி வயல்களை பார்வையிட்டார்.
கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் அயன்சிங்கம்பட்டி, பிரம்மதேசம் கிராமத்தில் ரூ.5 லட்சம் மானியத்தொகையில் பண்ணை கருவிகளை வழங்கினார். மேலும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நெல் நடவு எந்திரம் மூலம் நடவு செய்யப்பட்ட திருந்திய நெல் சாகுபடி வயல்களையும் நேரில் பார்வையிட்டார். அப்போது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி, துணை வேளாண்மை அலுவலர் முருகன், உதவி வேளாண்மை அலுவலர்கள் சாந்தி, விஜயலட்சுமி, அமுதா, பார்த்திபன், சாமிராஜ், காசிராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story